அவிநாசியில் கௌசிகா நதி புணரமைக்கும் திட்டத்தினை கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்தார்.

அவிநாசி  ஊராட்சி ஒன்றியம்  தெக்கலூரில் கௌசிகா நதி புணரமைக்கும் திட்டத்தினை  கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்தார்.



திருப்பூர்  மாவட்டம் அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் நொய்யல் ஆற்றின் துணை நதியான கௌசிகா நதியானது தெக்கலூர், கணியாம்பூண்டி, புதுப்பாளையம் மற்றும் உப்பிலிபாளையம் ஆகிய 4 ஊராட்சிகளை கடந்து செல்கிறது.  இந்த கௌசிகா நதிக்கு பல்வேறு இடங்களிலிருந்து சிற்றோடைகள் மூலமாக மழை நீரானது செல்கிறது.  மழைக்காலங்களில் அதிக அளவிலான மழை நீரானது கௌசிகா நதியில் சென்று நொய்யல் ஆற்றில் கலக்கிறது. இந்த கௌசிகா நதி மற்றும் அதன் சிற்றோடைகளில் செல்லும் நீரினை தடுத்து நிலத்தடி நீரினை உயர்த்திட பல்வேறு இடங்களில் கடந்த காலங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளது.


இவ்விடங்களை திருப்பூர்  மாவட்ட கலெக்டர்  கடந்த 5.11.2019 ஆம் நாள் நேரில் ஆய்வு செய்து இப்பொருள் குறித்து ஆலோசனைகள் வழங்கியதை தொடர்ந்து திருப்பூர்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் திட்ட இயக்குநர்  அவர்களின் தொடர்  கண்காணிப்பில் தற்போது தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி வாழும் கலை அமைப்பினரின் உதவியுடன் தெக்கலூ, கணியாம்பூண்டி, புதுப்பாளையம் மற்றும் உப்பிலிபாளையம் ஆகிய ஊராட்சிகளில் செல்லும் கௌசிகா நதி மற்றும் அதன் சிற்றோடைகளில் நீர்  செல்லும் பாதையான துல்லியமாக கண்டறியப்பட்டது.


மேலும் கௌசிகா நதி மற்றும் அதன் சிற்றோடைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் 36 வருட சராசரி  அளவினைக் கொண்டும், மண்ணின் தன்மை மற்றும் அப்பகுதிகளில் அமைந்துள்ள பாறைகளின் அமைவிடம் ஆகியவற்றை கொண்டும், பல்வேறு விதமான நீர்  சேகரிப்புபணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேற்காணும் பணிகளில் முதற்கட்டமாக 64 மீள்நிரப்புக்குழிகள் தலா ரூ.1.57 இலட்சம் மதிப்பீட்டிலும், 32 கம்பிவலையுடன் கூடிய தடுப்பணைகள்  தலா ரூ.1.36 இலட்சம் மதிப்பீட்டிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் மீள் நிரப்புக் குழியானது 15 அடி நீளம் 6 அடி அகலம் 20 அடி ஆழத்தில்  குழி தோண்டப்பட்டு, 20 அடி ஆழத்திற்கும் கான்கிரிட் வளையம் வைக்கப்பட்டு அதனை சுற்றிலும் ஐல்லிக்கற்கள் நிரப்பப்படவுள்ளது.



இதன் மூலம் ஓடையில் செல்லும் மழைநீர்  ஐல்லிக் கற்களால் வடிகட்டப்பட்டு சுத்தமான நீரானது நிலத்திற்குள் செல்லும். இதன் மூலம் மழைநீரானது நிலத்தின் நீர்  சேமிக்கும் பகுதிக்கு நேரடியாக கொண்டு செல்ல இயலும். இத்திட்டத்தின் மூலம் நிலத்தடிநீர்  மட்டம் வெகுவாக உயர்வதுடன் மேற்கண்ட 4 ஊராட்சி பகுதிவாழ்மக்களின் தனிநபர்  ஆழ்துளை கிணறுகள், பொது ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகளின் நீர்  மட்டங்களும்  உயரும்.  இதன் மூலம் 4 ஊராட்சிகளை சார்ந்த சுமார்  1000 ஏக்கர்  பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் பெருமளவில் பயன்பெறும் என மாவட்ட  கலெக்டர் க.விஜயகாh;த்திகேயன் தெரிவித்தார்.
                       
இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர;ச்சி முகமை திட்ட இயக்குநர் ,ரூபன்சங்கர்ராஜ், உதவி இயக்குநர்  (ஊராட்சிகள்)  பாலசுப்பிரமணியன், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, அவிநாசி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஜெகதீசன், துணைத்தலைவர்  பிரசாத்குமார், ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர்  சேகர், அவிநாசி வட்டாட்சியர்  சாந்தி  அவிநாசி வட்டாரா வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள், தெக்கலூர்  ஊராட்சி மன்றத்தலைவர்  மரகதமணி, துணை ஆட்சியர்கள் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.



 


Previous Post Next Post