நாரப்பா வாக உருவெடுக்கும் அசுரன்


வெற்றி மாறன் தனுஷ் இணைந்து பல படங்களில் வேலை செய்து உள்ளனர். வட சென்னை படத்திற்கு பிறகு வெற்றி மாறன் எந்த படத்தை யாரை வைத்து எடுக்க போகிறார் என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் எழுந்தது. வட சென்னை படத்தை முடித்து விட்டு தனுஷ் பல படங்களில் நடிக்க சென்றுவிட்டார். வெற்றி மாறன் தனது அடுத்த கதையை உருவாக்கி கொண்டு இருந்தார். இதன் பின் சில மாதங்கள் கழித்து செய்தி வந்தது தனுஷ் வெற்றி மாறன் உடன் இணைவதாகவும் அதனை கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்றும்
வெக்கை என்ற நாவலை தழுவி இப்படத்தை எடுத்தார் வெற்றி மாறன். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இப்படம் வெற்றிகரமாக நூறாவது நாளை எட்டியது. இப்படத்திற்கு பல மேடைகளில் பல விருதுகள் கிடைத்தன. ஒரு படம் ஒரு மொழியில் ஹிட் ஆனால் அதனை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படும். அசுரன் தெலுங்கில் ரீமேக் அவதாக சில மாதங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர் வெங்கடேஷ் இப்படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் இயக்குனராக ஸ்ரீகாந்த் பணியாற்றுகிறார். இசை அமைப்பாளராக மணி ஷர்மா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.