ஓ பி எஸ் ஐ திராவிட மாயை ஆட்கொண்டுவிட்டது: அர்ஜூன் சம்பத் பேட்டி

ஓ. பி.எஸ்.சை திராவிட மாயை ஆட்கொண்டு விட்டது.  ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் திராவிட மாயையை ஒழித்து விடும் என்று திருப்பூரில் அர்ஜூன் சம்பத் பேட்டிதிருப்பூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க திருப்பூர் வந்த அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் ஆன்மிக அரசியல் கொள்கைகள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், துக்லக் விழாவில் பேசும்போது,  1971 வது ஆண்டு, ராமர் அவமதிக்கப்பட்ட சம்பவத்தை பேசினார். இதை திராவிடர் கழகத்தினர் எதிர்க்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ஆதாரங்களை காட்டி, மன்னிப்பு கேட்க முடியாது என மறுத்து விட்டார்.
இந்த சம்பவத்தை ஏன் நடத்தியவர்கள் மறுக்க வேண்டும். ரஜினிகாந்துக்கு ஆதரவு பெருகுவதால், அவருக்கு எதிராக ஒரு சில ஈ.வே.ரா
 இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தினர். வழக்கு போடுவதாக மிரட்டினார்கள். இதற்கு அவர் அஞ்சப்போவதில்லை. ரஜினிக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். ரஜினிகாந்துக்கு முழுமையான ஆதரவை தெரிவிக்கிறேன். தி.க வின் வக்கிர செயல்பாடுகளை கண்டிக்கிறேன்.
தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு திமுக ஆட்சி காலத்தில் நடந்த போது, சிவாகம முறைப்படி தான் நடைபெற்றது. குடமுழுக்கு நடத்த மொழி ஒரு முக்கியமல்ல. மகுடாகமம் என்பதே தமிழ் முறை தான். இதில் குழப்பம் ஏற்படுத்தவே தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என சிலர் தெரிவிக்கிறார்கள். 
இந்த குழப்பங்களுக்கு தமிழக அரசு பணிந்து போக கூடாது. 
கள் இயக்கத்துக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். 
கச்சத்தீவில் குடியரசு தினத்தன்று தேசிய கொடி ஏற்ற வேண்டும். 
ஓ.பி.எஸ்., நல்ல கடவுள் பக்தர். அவரைக்கூட திராவிட மாயை ஆட்கொண்டு விட்டது.  உண்மையில் அவர் ஈவேரா கொள்கை கொண்டவர் அல்ல. 
ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் மூலம் திராவிட இருள் நீங்கும்.