பவானியில் மறு வாக்கு எண்ணிக்கையின் போது மயக்கம் அடைந்த வேற்பாளர்

ஈரோடு மாவட்டம் பவானியில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நேற்று வாக்கு எண்ணும் பணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பவானியில் நடைபெற்றது.பவானி ஒன்றியத்திற்குட்பட்ட 17 வார்டுகளில் அதிமுக 14 வார்டுகளிலும் திமுக 2 வார்டுகளிலும் சுயேச்சை வேட்பாளர் ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். இதில் சுயேச்சை வேட்பாளர் சதீஷ்குமார் 3வது வார்டில் போட்டியிட்டு தனக்கு எதிராக போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மணி என்கின்ற ராமலிங்கத்தை விட 7 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் இதனை எதிர்த்து அதிமுக வேட்பாளர்.மணி என்கின்ற ராமலிங்கம் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என்று தேர்தல் அலுவலர் எழுத்துப்பூர்வமாக கடிதம் ஒன்றை கொடுத்தார். அதனை ஏற்றுக் கொண்ட தேர்தல் அலுவலர் மறு வாக்கு எண்ணிக்கை மூன்று மணி நேரம் தாமதத்திற்கு பின்னர் நடைபெற துவங்கியது.சிறிது நேரம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென அதிமுக வேட்பாளர் மணி என்கின்ற ராமலிங்கம் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். மருத்துவர்கள் அவசர சிகிச்சை கொடுத்து அவரை உயிர் பிழைக்க வைத்தனர். அவரை மேல் சிகிச்சைக்காக பவானி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பின்னர்  வேட்பாளர் மணி என்கின்ற ராமலிங்கம் மருத்துவமனையில் உள்ள காரணத்தினால் மீண்டும் இரண்டு மணி நேரம் தாமதத்திற்கு பின்னர் அதிமுக வேட்பாளரின் முதன்மை முகவரை வைத்துக் கொண்டு மீண்டும் வாக்கு எண்ணிக்கை துவங்கியது. அதிகாலை 4.30 மீண்டும் சுயச்சை வேட்பாளர் சதீஷ்குமார் ஊராட்சி ஒன்றிய 3வது வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். என்று தேர்தல் அலுவலர் கூறினார் இவர் இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மணி என்கின்ற ராமலிங்கத்தை விட 6 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மணி என்கின்ற ராமலிங்கம் அவசர சிகிச்சை செய்ய மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து விட்டார்.