பண்ணாரி அருகே,வெப்பம் தணிக்க. சாலையோரம் குடிநீரை தேடும் காட்டுயானைகள்.. ஆபத்தை உணரா, செல்போனில் படம்பிடிக்கும் வாகன ஓட்டிகள். வனப்பகுதிக்குள் நீரை சேமிக்க, அரசுக்கு கோரிக்கை.


 ஈரோடுமாவட்டம்,சத்தியமங்கலம் புலி கள் காப்பக பகுதியில்,10 வனச் சரகங் கள் உள்ளன.இதில்ஏராளமான காட்டு யானைகள், காட்டெருமை கரடி, புலி, புள்ளிமான் மற்றும் சிறுத்தை உள்ளி ட்ட வனவிலங்குகள் உள்ளன.காட்டு யானைகள் உணவுக்காகவும் குடி நீரு க்காகவும்வனத்தைவிட்டு,வெளியேறி விவசாய விளை நிலங்களில் புகுந்து, பயிர்களை நாசம் செய்வதும், குடிநீர் குழாய்களை உடைத்து, குடிநீர் பருகு வதும்  வாடிக்கையான ஒன்று.

இந்நிலையில் இன்று மாலை 5 மணி அள வில்,சத்தியமங்கலம் மைசூர் தேசியநெடுஞ்சாலையில்,பண்ணாரிகோவில் அருகே,இரண்டு காட்டு யானை கள் உணவு மற்றும் குடிநீர் தேடி சாலை ஓரத்தில் உலா வந்த போது, ஆபத்து உணராத வாகன ஓட் டிகள்,காரில் மற்றும் இருசக்கர வாக னத்தில் இருந்து படியே, செல்போனி ல் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். மேலும் சாலையின் மறுபுறம் பாலத் தின் அருகே, கசிவுநீர் குட்டைக்கு குடிநீர் தேடி கூட்டமாய் வந்த புள்ளி மான்கள் கூட்டம் ஏமாற்றத்துடன் திரு ம்பின.தற்போது கோடை வெப்பம் அதிக ரித்து வரும் நிலையில் ,வனப் பகுதிக்குள் உள்ள நீர்த்தேக்கங்கள் மற்றும் கசிவு நீர் குட்டைகளில், வன விலங்குகளுக்கு தேவையான, நீரை சேமித்து வைக்க,வனத்துறை நடவடி க்கை மேற் கொள்ள வேண்டும் என வன ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர் வலர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளனர்.

.

Previous Post Next Post