சேலம் மாவட்டத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு உள்ள மதுபானக்கடைகள் அடைப்பு !

சேலம் மாவட்டத்தில் வருகின்ற 26.01.2020 ஞாயிற்றுக்கிழமையன்று குடியரசு தினத்தை முன்னிட்டு உள்ள மதுபானக்கடைகள் மற்றும் மதுகூடங்கள் மூடப்படுகிறது.மாவட்ட கலெக்டர்  சி.அ.ராமன் தகவல்.


தமிழ்நாடு அரசு அரசாணை எண்.50 உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, நாள்.29.10.2012-ன்படி 26.01.2020 குடியரசு தினத்தை (ஞாயிற்றுக்கிழமை) முன்னிட்டு மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும்  எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபான பார்கள் மற்றும் ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். மேலும், மேற்கண்ட நாளில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட கலெக்டர்  சி.அ.ராமன் தெரிவித்துள்ளார்.