கொரனோவுக்கு மருந்து ரெடியாம்.. சீனாவுக்கு போய் சிகிச்சையளிக்க அனுமதி கேட்கிறார் ஓமியோபதி டாக்டர்

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஹோமியோபதியில் மருந்து உள்ளது. அரசு அனுமதித்தால் சீனாவிற்குச் சென்று மருத்துவம் பார்க்க தயார். தமிழக அரசின் முன்னாள் மருத்துவ ஆலோசகர் பேட்டி.சீனாவில் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் உலக நாடுகள் அதற்கான மாற்று மருந்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருப்பூரைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் கிங் என்பவர்  இதற்கான மருந்து முன்னதாகவே உள்ளதாகவும் நோய் தாக்கத்தின் அறிகுறிகளைக் கொண்டு மருந்துகளை வழங்கி குணப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார் மேலும் அரசு அனுமதித்தால் சீனாவிற்குச் சென்று மருத்துவம் பார்க்க தயாராக உள்ளதாக இந்தியாவிற்கான சீனத் தூதர் மற்றும் பிரதமர், குடியரசுத் தலைவர், தமிழக முதலமைச்சர் மற்றும் சுகாதாரத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இவர் தமிழக அரசின் ஹோமியோபதி மருத்துவ முன்னாள் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.