அரோமா பால் நிர்வாக இயக்குநர் பொன்னுசாமி பிறந்த நாள் - ஊழியர்கள் 60 பேர் ரத்ததானம் 

 


 

திருப்பூர் அடுத்துள்ள காரணம்பேட்டை, சோமனூர் ரோட்டிலுள்ள ஸ்ரீ மகாலட்சுமி டெய்ரி பிரைவேட் லிமிடெட்  அரோமா பால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர். பொன்னுச்சாமியின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு இரண்டாவது ஆண்டு சிறப்பு ரத்ததான முகாம் நிறுவன கூட்ட அரஙகில்  
நடைபெற்றது, நிறுவன மேலாளர் சகாயபாபு தலைமையில், கோபால், ஹரிபிரசாத், கோபாலகிருஷ்ணன், கனகராஜ், ஜெயந்தி, ஜானகி, சேகர்,  சரவணன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ரத்ததானம் செய்தனர். பின்னர் அனைத்து ஊழியர்களின் சார்பில் நிர்வாக இயக்குனருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.