கொரோனாவை ஒழிக்க கோபி போலீசார் விழிப்புணர்வு: பொதுமக்களுக்கு மாஸ்க் வழங்கினர்

ஈரோடு மாவட்டத்தில்  கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக ஈரோடு  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின் பேரிலும்,  கோபி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தங்கவேலு  ஆலோசனையின் பேரில் கோபி காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் கூறுகையில்  கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக கோபி காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள், மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதார்கள் அனைவரும் நுழைவாயில் பகுதியில் வாளியில்  வைத்திருக்கும் தண்ணீரில் கைகளை நன்கு கழுவி உள்ளே வர அறிவுறுத்தபட்டுள்ளது.


மேலும் காவலர் குடியிருப்பில் சுகாதார துறையின் மூலம்  கிருமி நாசினி கொண்டு  சுத்தமாக துடைத்து பராமரிப்பு செய்யப்பட்டுள்ளது, மேலும் கடையில் பொருட்கள் வாங்குபவர்கள் கூட்டமாக நிற்கக் கூடாது.ஒரு மீட்டர் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும், தேவையில்லாமல் கும்பலாக நிற்கக் கூடாது. ஒவ்வொருவருக்கும் பொறுப்பு வேண்டும், எனவும்  கடைக்காரர்கள் பொருட்கள் வாங்குபவர்கள் இடம் கும்பலாக வரக்கூடாது என தெரியப்படுத்த வேண்டும்,வியாபார நோக்கத்துடன் செய்யக்கூடாது,சேவை நோக்கத்துடன் செய்ய வேண்டும்...பொது மக்கள் குழந்தைகள் மாஸ்க் அணியவும், சேனி டைசர் வைத்து கொள்ளவும், வைரஸ் நோயிலிருந்து காத்து கொள்ள அடிக்கடி கை களை சுத்தமாக கழுவவும் அறிவுரை வழங்கினார்.


Previous Post Next Post