அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் அவசர ஆய்வுக்கூட்டம்

கொரோனா வைரஸ் குறித்து அனைத்து மருத்துவ துறை மற்றும் மாவட்ட துறை அதிகாரிகளுடன் தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.சி சம்பத்  அவசர ஆலோசன கூட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 
நடைபெற்றது.



 கொரானா வைரஸ் குறித்து அனைத்து மருத்துவ துறை மற்றும் மாவட்ட துறை அதிகாரிகளுடன் தமிழக தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் கடலூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்களுக்கு தேவையான நிதிகளை உடனடியாக ஒதுக்கீடு செய்யவும் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் இடம் கூறினார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது கடலூர் மாவட்டம் சுனாமி, தானே புயல் போன்றவைகளால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.



அதை விட தற்போது உள்ள கொரோனா வைரஸ் பிரச்சினை உலக அளவில் பெரிய பிரச்சனையாகும் இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசு உத்தரவின் பேரில் 144 ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என கட்டளை இடப்பட்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது அதோடு ஒரு ரேஷன் கார்டு அட்டைக்கு ஆயிரம் ரூபாய்  மற்றும் நியாய விலை கடையில் வழங்கப்படும் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


மேலும் கடலூர் மாவட்டம் தனிப்பிரிவு அமைக்கப்பட்ட மருத்துவமனைகள் சிதம்பரம் நெய்வேலி திட்டக்குடி விருத்தாசலம் பண்ருட்டி ஆகிய மருத்துவமனையில் 50 படுக்கை இருக்கை தயார் நிலையில் உள்ளன மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் அமர்த்தப்பட்டு பணி செய்து வருகிறார்கள்.


மேலும் மாவட்டத்தில் ஏழு இடங்களில் செக்போஸ்ட் போடப்பட்டு 144 தடை உத்தரவு செயல்படுத்தப்பட்டு 
கண் காணிக்கப்பட்டு வருகிறது.


வள்ளலார் கூறியபடி தனித்திரு விழித்திரு பசித்திரு என்ற கருத்தின் படி பொதுமக்கள் சமூக நலனில் அக்கறைகொண்டு வெளிநாடு சென்று வந்தவர்கள் தன்னைத் தானே தனிமைப் படுத்தி கொண்டு குடும்பத்தையும் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் சமூகத்தையும் காப்பாற்ற வேண்டுமென்றும் கடலூர் மாவட்ட பொது மக்கள் அனைவரும்   மத்திய மாநில அரசு அறிவித்துள்ள பூரண ஊரடங்கு உத்தரவிற்கு முழு ஒத்துழைப்பு தந்து கடைபிடித்து வாழ வேண்டும் எனவும் தெரிவித்தார்.


Previous Post Next Post