திருப்பூரில் உணவு வழங்குகிறது தமுமுக

கொரோனாவின் கொடிய தாக்குதலில் இருந்து
தேசத்தையும் தேச மக்களையும் காக்க தற்ப்போது நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ளது.


இவ்வேளையில் திருப்பூரில்  காவல் துறையினருக்கும் ஊடகத்துறையினருக்கும் இன்னும் உணவில்லாது தவிப்போறுக்கும் நாளை(25.3.2020) முதல் தமிழ்நாடு முஸ்லீம் முனனேற்ற கழகம் சார்பாக சுத்தமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி முக கவசம் கை கவசம் மற்றும் பாதுகாப்பான உடையுடன் உணவு வழங்க ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது 
தேவை படுவோர் மாவட்ட நிர்வாகிகளை தொடர்புகொள்ளலாம்.


தற்ப்போதைய அவசர நிலை சூழலில் நாம் அனைவரும் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்க்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்
என  தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் தெரிவித்து உள்ளது.


குறிப்பு..மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியேடு இப்பணிகள் மேற்க்கொள்ளப்படுகின்றது.