அளுக்குளி ஊராட்சியில் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள்: அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகாக     ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அ தி மு க சார்பில் 20000ஏழை குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.முதற்கட்டமாக  அளுக்குளி ஊராட்சியில் உள்ள  அம்பேத்கர் நகர்,பள்ளத்து தோட்டம் காலனி, சந்தை கடை, நரிக்குறவர் காலனி  திருவள்ளுவர் நகர் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கி தொடங்கி வைத்தார்.


அதன் தொடர்ச்சியாக நம்பியூர் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட கரட்டுபாளையம் பகுதியில் உள்ள கலை கூத்தாடி குடும்பங்கள் மற்றும் நரிக்குறவர் இன மக்களுக்கும் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.


பின்னர்  செய்தியாளர்களிடம் கூறியதாவது....
 இந்த 20000 குடும்பங்களுக்கும் மூன்று நாட்களுக்குள் பொருட்கள்  வழங்கப்படும் எனவும் ,கோபி நாகதேவன் பாளையம் அரசு துவக்க பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் தங்களிடம் படிக்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1000வழங்கியது குறித்து கேட்ட போது, ஆசிரியர்கள் கொரோனா ஒழிப்பு நடவடிக்கை பணிகளில் தன்னார்வலர்களாக ஈடுபட்டு வருகின்றனர்.


வசதி படைத்தவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யலாம். சேவை செய்யும் தகவல்களை அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிகளிடம் கூறிவிட்டு சமூக இடைவெளி விட்டு  செய்யலாம் என கூறினார்.


சீருடையில் மாற்றம் இல்லை எனவும், மாணவர்களின் சேர்க்கை என்பது ஊரடங்கிற்கு பிறகு சூழ் நிலைக்கேற்ப சேர்க்கை  நடைபெறும் எனவும்,  தமிழக சட்ட சபையில் 110விதியின் கீழ் முதலமைச்சர் கூறிய படி, 50உயர் நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாகவும், 50நடுநிலை பள்ளிகள் உயர் நிலை பள்ளிகளாகவும், 35தொடக்க பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாகவும் வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்தபடும் என்றும் கூறினார்.


நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் ஜெயராமன்,ஆவின் தலைவர் காளியப்பன், யூனியன் சேர்மன் மௌதீஸ்வரன்,முத்தும ஹால் உரிமையாளர் வெங்கடேஸ்வரன்,  நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம்,மாவட்ட கவுன்சிலர் கௌசல்யா ஈஸ்வரமூர்த்தி,எலத்தூர் பேரூர் கழக செயலாளர் சேரன் சரவணன்,அளுக்குளி ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி பாண்டு, ஊராட்சி கழக செயலாளர் பாண்டுரங்கசாமி,துணை தலைவர் ஜெயமணி நல்லசாமி, யூனியன் கவுன்சிலர் மகாலட்சுமி, ஊராட்சி செயலர் கருப்புசாமி,முத்துவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.