நெய்வானத்தம் ஊராட்சியில் ரூ.3 லட்சம் மதிப்பில்750 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்

நெய்வானத்தம் ஊராட்சியில் ரூ.3 லட்சம் மதிப்பில்750 குடும்பங்களுக்கு
அத்தியாவசிய நிவாரண பொருட்கள் ஆணையாளர் மகாதேவன் வழங்கினார்

திருவண்ணாமலை ஏப். 26 - திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நெய்வானத்தம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 3 லட்சம் மதிப்பில் 750 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்களை கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கே.பி.மகாதேவன் வழங்கினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் ஊராட்சி மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் முக்கிய அரசியல் கட்சிகள் சார்பில் நிவாரண உவித்தொகை அத்தியாவசிய நிவாரண பொருட்கள் கபசுர குடிநீர் வழங்குதல் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் வேட்டவலம் அடுத்த நெய்வானத்தம் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ர.ரமேஷ் தலைமையில் தனது சொந்த செலவில் ரூ.3 லட்சம் மதிப்பில் 750 ஏழை எளியோர் மற்றும் ஊரடங்கு காரணமாக வேலையின்றி வருமானமில்லாமல் வீட்டிலிருக்கும் ஏழைகளுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.அனுராதாசுகுமார் பாஜக தெற்கு மாவட்ட செயலாளர் டி.சிவசங்கரன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.எஸ்.சிலம்பரசன் ஆகியோர் முன்னிலை வகிக்க ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி ரவி அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கே.பி.மகாதேவன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) ஜி.பழனி ஆகியோர் 750 ஏழை குடும்பங்களுக்கு அரிசி காய்கறி மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கியதோடு பொதுமக்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு முகக்கவசம் கையுறை கிருமிநாசினி உள்ளிட்ட கொரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்களையும் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து ஊராட்சி பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தேவையின்றி யாரும் வீட்டைவிடடு வெளியே வரவேண்டாம் குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்க வேணடாம் விலைமதிப்பில்லாத உயிர்களை பாதுகாக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதோடு சமூகஇடைவெளியை கடைபிடிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எம்.தனபால், இ.கிருஷ்ணமூர்த்தி, எம்.வாசுகி முருகன், ஆர்.மரகதம் ரவி எஸ்.சசிகலா சரவணன் தன்னார்வலர்கள் எஸ்.முருகன் பி.தமிழ்ச்செல்வன் கே.விஜயராஜ் எம்.அருண் எஸ்.கமலக்கண்ணன் இ.சுந்தர்ராஜ் என்.உதயா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் எஸ்.தெய்வீகன் நன்றி கூறினார்.


Previous Post Next Post