கிருத்துவ கல்வி நிறுவனங்கள் சார்பில் 300 குடுகுடுப்பை குடும்பங்களுக்கு 2000 கிலோ அரிசி

திருவண்ணாமலையில் கிருத்துவ கல்வி நிறுவனங்கள் சார்பில் 300 குடுகுடுப்பை குடும்பங்களுக்கு 2000 கிலோ அரிசி நிவாரணம்



நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தி வருகின்றது. இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொது மக்கள் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவால் பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் முடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம், மற்றும் தன்னார்வளர்கள் உள்ளிட்ட அனைத்து தொண்டு நிறுவனங்களும் நிவாரணப்பொருட்கள் வழங்கி வருகின்றது.

திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள அய்யம்பாளையம் புதூர் கிராமத்தில் உள்ள குடுகுடுப்பை சமூகத்தைச் சேர்ந்த 300 பேருக்கு நிவாரணப்பொருட்கள் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திருவண்ணாமலை செங்கம் சாலையில் ரமணமகரிஷி லொயோலா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மவுண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த தனியார் கிருத்துவ கல்வி நிறுவனங்கள் சார்பில் 300க்கும் மேற்பட்ட குடுகுடுப்பை குடும்பத்தினர்களுக்கு 2 ஆயிரம் கிலோ அரிசி, 300 கிலோ பருப்பு உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் வழங்கும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் விஜயமகேந்திரன் தலைமை தாங்கினார்.

இதில் கலந்து கொண்ட பங்கு தந்தையும் பள்ளியின் தாளாளருமான பங்கிராஸ், அருட் சகோதரி குளோரியா ஆகியோர் குடுகுடுப்பைக்காரர்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்களை வழங்கினர். அப்போது குடுகுடுப்பை காரர்கள் சமுக இடைவெளி விட்டு நிவாரணப்பொருட்களை வாங்கி சென்றனர். இந்நிகழ்ச்சியில் அல்லிகொண்டாப்பட்டு அருள்தந்தை அந்தோணி, அருள்தந்தை ஆரோக்கியதாஸ், வருவாய் ஆய்வாளர் காவேரி, உதவி ஆய்வாளர் சிவசங்கர் பலர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post