உணவின்றி வாழ்ந்து வந்த 56 குடும்பங்களுக்கு திட்டக்குடி எம்.எல்.ஏ கணேசன் வழங்கினார்

உணவின்றி வாழ்ந்து வந்த 56 குடும்பங்களுக்கு திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் உணவுப்பொருள்  வழங்கினார்.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

உலகையே அச்சுறுத்தி வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் பரவல் தடுக்க மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்றது. இதனால்  தொழிலாளர்கள் விவசாயி மற்றும் பொதுமக்கள் வீட்டிற் குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வாழ்வாதாரம் இன்றி வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலையில் பணியாற்றி வரும் 56 குடும்பங்கள் கொரோனா வைரஸ் காரணத்தினால் வேளை இல்லாமல் வாழ்வாதரம் இழந்து இருக்ககூடிய அம்பிகா சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 56 குடும்பங்களுக்கு திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சி.வெ கணேசன் அரிசி மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கினார்.

 

அரிசி பெற்றுகொண்ட தொழிலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர் சி.வெ கணேசன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அதைதொடர்ந்து பாசிக்குளம் ஊராட்சி ஆதிதிராவிடர் காலணியில் தூய்மை இன்றி இருப்பதாக அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் சுத்தம் செய்து தரவேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று எம்எல்ஏ கணேசன் அப்பகுதிக்கு நேரில் சென்று துப்புரவு பணியாளர்கள் மற்றும் இளைஞர்களை வைத்துக்கொண்டு ஜேசிபி இயந்திரம் மூலம்  தூய்மை படுத்தும் பணியை  பாசிகுளம் ஊராட்சி முழுவதும் சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் நீலமேகம், கட்சி நிர்வாகிகள் அன்பரசு,ரமேஷ்  உடனிருந்தனர்.

Previous Post Next Post