வடநாட்டை சேர்ந்த 60 இளைஞர்களுக்கு 20 நாட்களுக்கு தேவையான மளிகை பொருட்கள்; இந்திரா சுந்தரம் வழங்கினார்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


திருப்பூரில் தங்கியிருந்து வேலை செய்து வந்த சுமார் 60 வடநாட்டை சேர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான மளிகை பொருட்களை திருப்பூர் தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரகாஷ், எஸ்.ஐ இராமசாமி முன்னிலையில் இந்திரா சுந்தரம் வழங்கினார். 


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்பைடர் லாட்ஜில் வட நாட்டை சேர்ந்த இளைஞர்கள் பலர் தங்கியிருந்து வேலைசெய்து வருகின்றனர். கொரோனா நடவடிக்கை காரணமாக ஊரடங்கு நிலை அமலில் உள்ளதால் அவர்களால் எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் சாப்பாட்டிற்கு மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதனை அறிந்த மணியம் எலக்ட்ரிக்கல்ஸ் இந்திரா சுந்தரம் (ரோட்டரி எவரெஸ்ட்) அவர்களுக்கு 20 நாட்களுக்குத் தேவையான கோதுமை மாவு, தக்காளி, வெங்காயம், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார. மேலும் அனைவருக்கும் முககவசமும் வழங்கப்பட்டது.