8 ஊராட்சிகளுக்கு கிருமிநாசினி இயந்திரம்: எம்.எல்.ஏ., ராஜாகிருஷ்ணன் வழங்கினார்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்டகோபி யூனியனில் உள்ள 8ஊராட்சிகளுக்கு  பொலவக்காளிபாளையம் ஊராட்சியில் சட்ட மன்ற உறுப்பினர் இ. எம். ஆர். ராஜாகிருஷ்ணன் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தை ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் வெங்கடாச்சலத்திடம் வழங்கினார்.


அதனை தொடர்ந்து அரசு அறிவித்த கொரோனா நிவாரண நிதியையும், விலையில்லா பொருட்களையும் வழங்கினார்.  அருகில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர் சீனிவாசன், யூனியன் கவுன்சிலர் இளங்கோ, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பஷீர், குணசேகரன், ஊராட்சி செயலர்கள் மணிகண்டன், சதிஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.