காவலர்களுக்கான ஹோமியோபதி மருத்துவ முகாம்: சேவாபாரதி சார்பில் நடைபெற்றது

கொரோனா பாதிப்பு காலங்களில் பொதுமக்களுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவல்துறையினர்களுக்கு சேவாபாரதி சார்பாக ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் நோய் தொற்று எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.


திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் காவலர்களுக்கு  இன்று மருத்துவர் கார்த்திக் பாபு தலைமையில் ஹோமியோபதி மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை பரிந்துரைக்கப்பட்டது.



மத்திய காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர், உதவி ஆய்வாளர் முத்துக்குமார்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுமார் 90க்கும் மேற்பட்ட காவலர்கள் -ஊர்க்காவல் படை வீரர்கள் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் உடல் வெப்ப அளவு, ரத்தத்தில் சர்க்கரை அளவும் சரிபார்க்கப்பட்டு எதிர்ப்பு சக்தி மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன.


இந்நிகழ்ச்சியில் ஹிந்து முன்னணி மாவட்டப்பொதுச்செயலாளர் செந்தில்குமார், நகர பொதுச்செயலாளர் சதீஸ்குமார்,  சேவாபாரதி தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.
அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.


நாளை (01.05.2020 - வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் திருப்பூர் மாவட்ட நாளிதழ்கள், தொலைக்காட்சி நிருபர்கள், புகைப்பட-ஒளிப்பதிவு கலைஞர்கள்,  சக பணியாளர்களுக்கு ஹோமியோபதி மருத்துவ முகாமானது ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


Previous Post Next Post