கடைசி நோயாளியும் டிஸ்சார்ஜ்.. கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது தூத்துக்குடி!

தூத்துக்குடி மாவட்டத்தில் 27 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இது வரை 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர். தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த பெண் குணமடைந்து இன்று வீடு திரும்பினார். இவரை அமைச்சர் கடம்பூர்ராஜீ மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி மற்றும் அரசு மருத்துவர்கள் வழியனுப்பி வைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆத்தூர், காயல்பட்டிணம், பேட்மாநகரம், செய்துங்கநல்லூர், தூத்துக்குடி போல்டன்புரம், தங்கம்மாள்புரம், கயத்தார், பசுவந்தனை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 27 பேர் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் ஐந்து பேர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். 


இதையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் வீடுகள் உள்ள 5 தாலுக்காவில் 9 மண்டலங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அந்த அப்பகுதியில் 55 ஆயிரம் வீடுகல் உள்ளன. இந்த பகுதிகளை சுகாதாரத்துறை, வருவாய்துறை, மாநகராட்சி, போலீஸ் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர். மேலும் இங்கு உள்ள முதியவர்கள், கர்பினி பெண்கள், ஊனமுற்றவர்கள் உள்ளிட்டவர்களுக்கு தினமும் சோதனை செய்வது, அறிகுறிகள் இருப்பவர்களுக்கு உடனடியாக மாதிரி பரிசோதனை செய்யப்படுகிறது. 


மேலும் இந்த பகுதியில் இருந்து மக்கள் வெளியே வர தடை செய்யப்பட்டுள்ளதால் அவர்களின் வீடுகளுக்கு மளிகை பொருட்கள் காய்கனிகள் கிடைக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொபைல் ஏடிஎம் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 


இந்தநிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் படிப்படியாக குனமடைந்து 26 பேர் இதுவரை வீடு திரும்பியிருந்தனர். இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் குணமடைந்து இன்று வீடு திரும்பினார். அவரை அமைச்சர் கடம்பூர்ராஜீ, மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். 


இதையடுத்து தூத்துக்குடி கொரோன இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. தூத்துக்குடிமாவட்டத்தில் கடந்த 13 நாட்களாக புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலத்திற்க்கு மாறியுள்ளது தூத்துக்குடி மாவட்டம்