தமிழ்நாட்டில் 53 பேர் பலி... 2532 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் நோய் பரவல் தீவிரம்

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2532 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்று பாதிப்பு காரணமாக 53 பேர் இறந்துள்ளனர்.


தமிழ்நாட்டில் கோரோனா நோய் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக சென்னை மாநகரில் தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.


இந்நிலையில் இன்று ஒரே நாளில் 2,532 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.


சென்னையில் மட்டும் இன்று ஆயிரத்து 493 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளது தெரியவந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 127 பேரும் கடலூரில் 90 பேரும், மதுரையில் 68 பேரும் திருவள்ளூரில் 120 பேரும் திருவண்ணாமலையில் 76 பேரும் வேலூரில் 87 பேரும் என மற்ற மாவட்டங்களிலும் நோய் தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது.


இன்றைய நிலையில் 25 ஆயிரத்து 863 பேர் நோய் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் உள்ளனர்.  இன்று ஆயிரத்து 438 பேர் நோய் குணமாகி வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.


இதன் மூலம் நோய் குணமடைந்து வீடு சென்றவர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 754 ஆக உயர்ந்துள்ளது. 


தமிழ்நாட்டில் இன்று பாதிக்கப்பட்ட 2532 பேரில் 2450 பேர் மட்டும் இங்கேயே பாதிப்புக்குள்ளானவர்கள் மீதமுள்ளவர்கள் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர்.


86 பரிசோதனை மையங்களில் முப்பத்தி 1401 பரிசோதனைகள் மூலம் இந்த நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் வரை 8 லட்சத்து 51 ஆயிரத்து 556 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு  59 ஆயிரத்து 377 ஆக உள்ளது.


சென்னையில் முழு லாக்டோன் அமலில் உள்ள நிலையில் திருவண்ணாமலை வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளன.


சென்னையை தாண்டி மற்ற மாவட்டங்களிலும் நோய் பாதிப்பு அதிகமாகி வருவது தமிழக மக்களை கவலை க்கு உள்ளாக்கி வருகிறது