97 பேர் மரணம்...5,864 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று மட்டும் மரணம் அடைந்தோர் 97 பேர் ஆவர்.


இதன் மூலம் இதுவரை மொத்தமாக 2,39,978 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் 3,838 பேர் செத்துப்போய் உள்ளனர். 


இதில் 57,962 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


சென்னையில் மட்டும் 1,175 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 354 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. திருவள்ளூரில் 325 பேருக்கும், கோவையில் 303 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 


சென்னையில் மட்டும் 18 பேர் இறந்து உள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக திருநெல்வேலியில் 8 பேர் செத்துள்ளனர். 


இன்று மட்டும் 5,295 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர். இதுவரை மொத்தமாக 1,78,178 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு சென்று விட்டனர். 


இன்று தான் அதிகபட்சமாக  97 பேர் கொரோனாவால் இறந்து போய் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.