நீலகரி மாவட்டம் குன்னூர் ஆருகுச்சி பகுதியில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது


நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது 485 யை தாண்டும் நிலையில் ஊராட்சி மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து கிராமம் கிராமமாக சென்று விழிப்புணர்பு கூட்டம் நடத்தி பொதுமக்களுக்கு முககவசம் அணிவது கை கழுவுவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்து விளக்கிவரும் நிலையில் ஊராட்ச்சிக்குட்பட்ட ஆருகுச்சி பகுதியில் மேலூர் ஊராட்சி மற்றும் காவல்துறை சார்பாக சமுதாய கூடத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.


இதில் ஆருகுச்சி மற்றும் மேலூர் கிராமங்களை சேர்ந்த கிராம தலைவர்கள், மேலூர் ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகாதேவி ஊராட்சி மன்ற துணை தலைவர் நாகராஜ் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி சசி,  கொலகொம்பை காவல்துறை உதவி ஆய்வாளர் செந்தில் மற்றும் மேலூர் ஊராட்சி செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு கூட்டத்தை நடத்தினர்.