ங்கோத்தா... ங்கொம்மா... கடன் வசூலிக்கும் லட்சனத்தை பாருங்க...

திருப்பூரில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்ற தொகையை திருப்பி செலுத்த போனில் அழைத்து ஆபாசமாக மிரட்டுவதாக புகார்.

திருப்பூர் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரகுபதி முத்துமணி தம்பதியர் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு செல்போன் ஒன்றை பஜாஜ் நிறுவனம் மூலம் கடன் பெற்று வாங்கியுள்ளனர்.


மாதம் 2600 ரூபாய் என நான்கு மாதங்கள் செலுத்தியுள்ளனர். இதனிடையே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வேலை இல்லாத சூழலில் இரு மாதம் தவணைத் தொகை கட்ட முடியாமல் இருந்துள்ளனர்.


இதனையடுத்து போன் மூலம் அழைத்த நிறுவனத்தினர் இரண்டு மாத தொகையை மொத்தமாக செலுத்தி விடுங்கள் என கூறி 7 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக 3000 செலுத்திய நிலையில் மீதி தொகையை செலுத்த முடியாமல் ரகுபதி முத்துமணி தம்பதியர் தவித்து வந்துள்ளனர்.


இந்நிலையில் இவர்களுக்கு போன் மூலமாக தினமும் அழைத்து பஜாஜ் நிறுவனத்தினர் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்து வருவதாக குற்றம்சாட்டி உள்ளனர்.


இதுதொடர்பாக அழைத்த ஒருவர் தன்னை வழக்கறிஞர் என அடையாளப்படுத்திக் கொண்டு 47 ஆயிரம் ரூபாய் கொடுத்தே தீரவேண்டும் என மிரட்டியுள்ளார். இன்று கொடுத்தால் ஆறாயிரம் ரூபாய் தரவேண்டும் நாளை என்றால் வழக்கறிஞரான கட்டணம் என அனைத்தும் சேர்த்து 47 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என ஆபாசமாகவும் பேசி திட்டியுள்ளார்.


வேலை இல்லாத சூழலில் பணம் கட்ட ஏற்படும் சிறிது தாமதத்தை பொறுக்கமுடியாமல் வட்டி அதற்கான தாமத கட்டணம் என அளவுக்கு மீறி தங்களை மிரட்டுவதாகவும் இதே நிலை தொடர்ந்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர்த்து வேறு வழி இல்லை என இவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.