வெங்கடேஷ் பண்ணையார் 17ம் ஆண்டு நினைவு நாள் – எஸ்.பி.ஜெயக்குமார்  தலைமையில்  ஆலோசனைக் கூட்டம்


 

வரும் செப்டம்பர் 26ம் தேதி நடைபெறவுள்ள வெங்கடேஷ் பண்ணையார் 17ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  தலைமையில்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 


 

கூட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செப்டம்பர் மாதம் முழுவதும் 144 தடைஉத்தரவு அமலில் உள்ளதால் ஊர்வலம் செல்வதற்கான தடை பற்றியும், ஜாதி ரீதியான கோஷங்கள் எழுப்ப கூடாது, நீதிமன்ற உத்தரவுபடி டிஜிட்டல் பேனர்கள் எதுவும் வைக்க கூடாது மற்றும் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

கூட்டத்தில் திருச்செந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர்  பாரத், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செல்வி, உதவி ஆய்வாளர் சதிஸ்நாராயணன், நாடார் பாதுகாப்பு பேரவை  ஓடைசெல்வம், சொர்ணவேல்,  கிளாஸ்டன், ஏ.சி துரை, அற்புதராஜ், அஸ்வின் மற்றும் செல்வநாதன் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.