திருப்பூர் மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்


பொதுமக்கள் நலன் கருதி, பொதுமக்களின் குறைகளை உயர் அதிகாரிகள் நேரடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வுகாணும் வகையில், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் நல்ல நட்புறவு ஏற்படும் வகையில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் ராஜேஷ்தாஸ் இ.கா.ப. உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன்.இ.கா.ப.,  தலைமையில் காவல் துணை ஆணையர், (சட்டம் & ஒழுங்கு) க.சுரேஷ்குமார், மேற்பார்வையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் வலையங்காட்டில் உள்ள சுப்பராயகவுண்டர் திருமண மண்டபத்திலும், மங்கலம் சாலையில் உள்ள பேரடைஸ் ஹாலிலும் நடைபெற்றது.   


வலையங்காட்டில் உள்ள சுப்பராயகவுண்டர் திருமண மண்டபத்தில் வடக்கு சரகத்தில் உள்ள வடக்கு காவல் நிலையம், அனுப்பர்பாளையம் காவல் நிலையம், 15 வேலம்பாளையம் காவல் நிலையம், திருமுருகன்பூண்டி காவல் நிலையம், மற்றும் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் 80 புகார் மனுக்கள் தொடர்பாக மனுதாரர்களும், எதிர்மனுதாரர்களும் வந்திருந்தனர். இந்த மனுக்களை வடக்கு சரக உதவி ஆணையர் எஸ்.வெற்றிவேந்தன், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் 68 மனுக்களை உடனடியாக தீர்வு காணப்பட்டது.  



மங்கலம் சாலையில் உள்ள பேரடைஸ் ஹாலில் தெற்கு காவல் நிலையம், மத்திய காவல் நிலையம், ஊரக காவல் நிலையம், வீரபாண்டி காவல் நிலையம் மற்றும் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் 35 புகார் மனுக்கள் தொடர்பாக மனுதாரர்களும், எதிர்மனுதாரர்களும் வந்திருந்தனர். இந்த மனுக்களை தெற்கு சரக உதவி ஆணையர் ஜெ.நவீன்குமார், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் 35 மனுக்களை உடனடியாக தீர்வு காணப்பட்டது


இந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனர். உயர் அதிகாரிகளிடத்தில் புகார் அளித்து நிலுவையில் உள்ள மனுக்கள்,  காவல் நிலையங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் தொடர்பாக மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை அழைத்து உயர் அதிகாரிகள் முன்னிலையில் நேரடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காணப்பட்டது.


திருப்பூர் மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன்,இ.கா.ப. முன்னிலையில் பொதுமக்களின் புகார் மனுக்களை காவல் அதிகாரிகள் விசாரணை  மேற்கொண்டு தீர்வு காணப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். மேலும் இந்த சிறப்பு குறைதீர் முகாமினை ஏற்பாடு செய்த காவல் ஆணையரிடம் மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்தனர்.