திருப்பூரில் காங்கிரஸ் கட்சினர் சத்தியாகிரகம்  போராட்டம்


உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் சிறுமி பாலியல் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அந்த சிறுமியின் குடும்பத்துக்கு நீதி வேண்டியும், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரை தாக்கிய அம்மாநில காவல் துறை யை கண்டித்தும் திருப்பூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் அமர்ந்திருந்து அமைதியான முறையில் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தினார்கள். இதில், கட்சி நிர்வாகிகள் ராமசாமி, விஜயலட்சுமி, கோபாலசாமி, ஈஸ்வரன்,    சித்திக், தீபிகா அப்புக்குட்டி, அனுஷம் வேலு, கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.