கள்ள நோட்டு வைத்திருந்த வாலிபர்களை பிடித்து விசாரணை

 வேளச்சேரியை அடுத்த சித்தாலப்பாக்கம் காரணை மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரபாகரன் (34). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று சித்தாலப்பாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு ரூபாய் 500 கொடுத்துள்ளார். 

அங்கிருந்த ஊழியர்கள் அந்த பணத்தை வாங்கி பார்த்த போது அது கள்ள நோட்டு என தெரிய வந்தது. இதையடுத்து ஊழியர்கள் அவரை பிடித்து வைத்துக்கொண்டு பெரும்பாக்கம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரபாகரனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில். அந்த 500 ரூபாயைக் தனது அண்ணன் ஜெகதீஸ்வரன்(38) கொடுத்ததாக கூறினார். 

இதையடுத்து போலீசார் ஜெகதீஸ்வரன் கைது செய்தனர். பின்னர் அவர் வீட்டில் பரிசோதித்த போது வீட்டில் மேலும் 25 ஆயிரம் மதிப்புள்ள (50* 500) ரூபாய் கள்ள நோட்டுகள் வீட்டில் இருந்ததை கண்டுபிடித்தனர். .


ஜெகதீஸ்வரன் இடம் விசாரணை நடத்தியதில் தாம்பரத்தில் தெரிந்த நபர் கொடுத்ததாகக் கூறியுள்ளார். போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திவருகிறார்கள்.