சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினம் - கனிமொழி எம்.பி. சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் மரியாதை.!


சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினம் - கனிமொழி எம்.பி,சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் மரியாதை.!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவுதினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது


சாத்தான்குளத்தில் அவரது கடையின் முன்புறம் வைத்திருந்த அவரது திருவுருவப் படத்திற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கருணாநிதி எம்பி மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.