சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 10 பேர் கைது - 81 மதுபாட்டில்கள் பறிமுதல்.!


தூத்துக்குடி மாவட்டத்தில் சிப்காட், திருச்செந்தூர், செய்துங்கநல்லூர், குரும்பூர், குளத்தூர், புதூர், எட்டயாபுரம், தட்டார்மடம்,  தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு  ஆகிய 9 காவல் நிலைய போலீசார் நேற்று ரோந்து சென்ற போது சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 10 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 81 மதுபாட்டில்கள்  பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து சம்மந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post