ஸ்ரீவைகுண்டத்தில் 14 வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி கைது - கைது செய்த தனிப்படையினை எஸ்.பி பாராட்டினார்.


ஸ்ரீவைகுண்டம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி, திருட்டு வழக்கு உட்பட 14 வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடி கைது - ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவுப்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர்  மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் காவல்நிலைய ஆய்வாளர்  அன்னராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் சந்திரகுமார் மற்றும் போலீசார் 

நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் வேன் ஸ்டான்ட் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஸ்ரீவைகுண்டம் நாராயணபுரத்தைச் சேர்ந்த பால்ராஜ் மகன் மாரி ராஜா (எ) குணா (31) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், 

அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒரு பெண்ணை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மேற்படி எதிரி மாரி ராஜா (எ) குணா மீது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, திருட்டு வழக்குகள் உட்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடியை கைது செய்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெகுவாக பாராட்டினார்.

Previous Post Next Post