தூத்துக்குடி தெர்மல் நகரில் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது.!


தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  வேல்ராஜ் தலைமையில் முதல் நிலைக் காவலர்கள் பென்சிங்,  மாணிக்கராஜ், சாமுவேல்,  மகாலிங்கம், செந்தில்,  திருமணி மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் 

நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது தூத்துக்குடி தெர்மல்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேம்ப்-I பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் (49) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், 

அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடனே மேற்படி தனிப்படையினர் அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து தெர்மல்நகர் காவல் நிலைய ஆய்வாளர்  ராதிகா வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

கைது செய்யப்பட்ட முருகன் மீது திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் மற்றும்  தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் தலா ஒரு கஞ்சா வழக்கு உட்பட மொத்தம் 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post