தூத்துக்குடியில் பணியின் போது மரணம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் முதல் நிலை காவலர் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதி - எஸ் பி ஜெயக்குமார் வழங்கினார்.!


தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பணியிலிருக்கும்போது அகால மரணமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் முதல் நிலை காவலர் ஆகியோரது  குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சரின் பொது  நிவாரண நிதி தலா ரூபாய் 3 லட்சத்திற்கான வரைவோலையை இன்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

கடந்த 12.08.2020 அன்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் தாமோதரன் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். 

அதே போன்று தூத்துக்குடி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வந்த முதல் நிலை காவலர் ராஜேஸ்வரன் 04.12.2020 அன்று உடல்நலக்குறைவால் காலமானார். 

மேற்படி இருவரும் பணியில் இருக்கும்போது அகால மரணமடைந்ததையடுத்து அவர்களது குடும்பத்தாருக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காலமான சிறப்பு உதவி ஆய்வாளர் தாமோதரன் என்பவரின் மனைவி மற்றும் வாரிசுதாரரான  வெங்கடேஷ்வரி என்பவருக்கும், 

மறைந்த முதல் நிலை காவலர் ராஜேஸ்வரன் என்பவரின் தந்தை மற்றும் வாரிசுதாரரான சுடலைமணி என்பவருக்கும் மேற்படி ரூபாய் 3 லட்சத்திற்கான வரைவோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  வழங்கி, அவர்களுக்கு கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அவர்களிடம் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்வின்போது காவல்துறை அலுவலக நிர்வாக அதிகாரி  சங்கரன், உதவியாளர் ரமேஷ் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

Previous Post Next Post