சின்னத்துரை&கோ ஜவுளிக்கடையில் எல்இடி பதாகையின் ஒளிபரப்பப்படும் காவல்துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி - எஸ்.பி ஜெயக்குமார் திறந்து வைத்தார்.!


தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் சின்னதுரை & கோ இணைந்து தூத்துக்குடியில் உள்ள சின்னதுரை & கோ துணிக்கடை வளாகத்தில் பொதுமக்களுக்கு காவல்துறையின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் வகையில் எல்.இ.டி சுவர் விளம்பர பலகையை (LED Wall Digital Board) புதிதாக அமைக்கப்பட்டிருந்தது. 

இந்த எல்.இ.டி சுவர் விளம்பர பலகையை இன்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  ரிப்பன் வெட்டி திறந்து வைத்து திருநங்கைகள் 50 பேருக்கு அரிசிப்பை மற்றும் போர்வைகள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை வழங்கினார்.

கொரோனா விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள், சைபர் குற்றங்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள், பேரிடர் காலத்தில் மக்கள் செய்யவேண்டியவைகள் உள்ளிட்ட  பல்வேறு சம்பவங்கள் குறித்து 

பொதுமக்களுக்கு பயன்தரக்கூடிய விழிப்புணர்வு செய்திகளை குறும்படம், புகைப்படங்கள், வாசகங்கள் மற்றும் படங்கள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இந்த எல்.இ.டி சுவர் விளம்பர பலகையின் மூலம் ஏற்படுத்தப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை சின்னத்துரை & கோ உரிமையாளர் ஹரிராமகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ், போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார்,  முருகப்பெருமாள் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் சின்னதுரை & கோ கடை ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Previous Post Next Post