தூத்துக்குடியில் போதைப்பொருள் கடத்தினால் குண்டர் சட்டத்தில் கைது - தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் எச்சரிக்கை.!


தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  ரூபாய் 14 லட்சம் மதிப்புள்ள 1700 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் 2 வாகனங்கள் பறிமுதல் - ஒருவர் கைது - கடந்த 6 மாதங்களில்  போதைப்பொருள் வழக்கில் சம்மந்தப்பட்ட 8 பேர் உட்பட 93 பேர் குண்டர் சட்டத்தில் கைது 

இதுபோன்று போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  எச்சரிக்கை.  விடுத்துள்ளார்

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் 

தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளர் அருள் தலைமையில்  உதவி ஆய்வாளர் வேல்ராஜ்,  சிவராஜா தலைமையில் முதல் நிலைக் காவலர்கள் பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல்,  மகாலிங்கம், செந்தில், திருமணி மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் 

நேற்று தூத்துக்குடி கருத்தபாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த டாட்டா ஏஸ் மினிலோடு வாகனத்தை ஓட்டி வந்த விளாத்திக்குளம், குளத்தூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் மாரியப்பன் (34) என்பவரை மடக்கி, மேற்படி வாகனத்தை சோதனை செய்ததில், 

அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 50 மூட்டைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மேற்படி தனிப்படையினர் அவரைக் கைது செய்து, அந்த வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மேலும் தூத்துக்குடி வட்டக்கோவில் அருகே மற்றொரு மினி லாரியில் 37 மூட்டைகள் ஏற்றி விற்பனை செய்வதற்கு வைத்திருப்பதாக அவர் தெரிவித்ததன் அடிப்படையில், 

தனிப்படையினர் அங்கு சென்று சோதனை மேற்கொண்டு, அவற்றையும் பறிமுதல் செய்து, அந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

மொத்தம் 1700 கிலோ எடை கொண்ட 2,50,968 பாக்கெட்டுகள் அடங்கிய 87 மூட்டைகளிலிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், அதற்குப் பயன்படுத்திய 2 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூபாய் 14 லட்சம் ஆகும்.

இந்த ஆண்டு இதுவரை கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் சம்மந்தப்பட்டதாக 184 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 219 பேர் கைது செய்யப்பட்டு 84 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கஞ்சா வழக்கில் சம்மந்தப்பட்ட 8 பேர் உட்பட 93 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போன்று தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 763 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 773 பேர் கைது செய்யப்பட்டு 72000 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இதுபோன்று போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

Previous Post Next Post