தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தை இன்றும் நாளையும் புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு..!


கொடநாடு விவகாரத்தால் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவைக்கு வெளியே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் ஈடுபட்டனர்.

சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தை இன்றும் நாளையும் அதிமுக புறக்கணிப்பதாக ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.