திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்றுவரும் கட்டுமான பணிகள் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு.!


தூத்துக்குடி மாவட்டம்   திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் ரூ.29.18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டிட கட்டுமான பணிகளை இன்று மீன் வளம் - மீனவர் நலன் மற்றும்  கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா. ஆர் ராதாகிருஷ்ணன்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ்,உதவி காவல் கண்காணிப்பாளர் திருச்செந்தூர் ஹர்ஷ் சிங்,செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) தேவி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்  உதவி ஆணையர் செல்வராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.