கயத்தார் செட்டிக்குறிச்சியில் புதியதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையம் எஸ்.பி ஜெயக்குமார் திறந்து வைத்தார்.!


கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டிகுறிச்சி பகுதியில் காவல்துறை  சார்பாக புதிதாக  அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், செட்டிக்குறிச்சி பகுதி  பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று காவல்துறை சார்பாக இந்த புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புறக்காவல் நிலையம் செட்டிக்குறிச்சி மட்டுமல்லாமல் அதன் சுற்று வட்டார கிராம பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த புறக்காவல் நிலையத்தில் காவல்துறையினர் 24 மணி நேரமும் இருப்பார்கள். செட்டிகுறிச்சி பொதுமக்கள் தங்களது புகார்களை கயத்தாறு காவல் நிலையம் சென்று கொடுக்க வேண்டிய அவசியமில்லை. 

இந்த புறக்காவல் நிலையத்திலேயே தங்களது குறைகளை தீர்த்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும். இந்த வசதியை செட்டிகுறிச்சி பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். பொதுமக்களுக்கு பணி செய்யவே காவல்துறை உள்ளது.

மேலும் கொரோனா பெருந்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியின் போது கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன், கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர்  முத்து, உதவி ஆய்வாளர்கள் அந்தோணி திலிப், பால் உட்பட காவல்துறையினர் மற்றும் செட்டிக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணசாமி உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post