தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை தூய்மை பணி - கனிமொழி எம்.பி. கொடியசைத்து துவக்கி வைத்தார்.!



தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தொடங்கியதை யொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதனையொட்டி தூத்துக்குடி மாநகர பகுதியில் பிரதான கழிவு நீர் செல்லும் பக்கிள்கால்வாய் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் தூர் வாரும் பணியை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து துவக்கினார்.

பின்னர் மழைக்காலங்களில் கடலுக்கு செல்லும் கழிவு நீர் வழித்தடங்கள் முழுமையாக தூய்மை பணியை மேற்கொண்டு தண்ணீர் செல்வதற்கு விரைவாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாரூஸ்ரீ, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, பகுதி செயலாளர் நிர்மல்ராஜ், மகளிர் அணி கஸ்தூரி தங்கம், பார்வதி, வட்டச்செயலாளர் ரவிசந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் அமாரூதீன், செந்தி;ல்குமார், முத்துசெல்வம், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, அதிகாரிகள் சரவணன், பிரின்ஸ்,  ஸ்டாலின் பாக்கியநாதன், நிர்வாகிகள் பிரபாகர், லிங்கராஜா, அல்பர்ட், மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post