விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை தடுத்து நிறுத்திய CISF அதிகாரி - இறுதியில் மன்னிப்பு.!


தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 லேப்டாப்கள் வைத்திருந்ததாக கூறி மத்திய தொழில் பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதனால் கடும் வாக்குவாதம் எழுந்தது.

இரண்டு லேப்டாப்களை எடுத்துச் செல்லக் கூடாது என்ற எந்த கட்டுப்பாடும் பயணிகளுக்கு இல்லை என அமைச்சர் கூறியுள்ளார். ஆனாலும், உதவி ஆய்வாளர் 2 லேப்டாப்களை எடுத்துச் செல்லக்கூடாது என அனுமதி மறுத்துள்ளார். 

அதற்குள் இவ்விஷயம் மூத்த அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். அமைச்சரை தடுத்து நிறுத்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை எஸ்.ஐ.,யும் மன்னிப்பு கேட்டுள்ளார். பின்னர் 2 லேப்டாப்களுடன் பயணிக்க அவரை அனுமதித்துள்ளனர்.

Previous Post Next Post