தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 114வது ஜெயந்தி - கனிமொழி கருணாநிதி எம்.பி மற்றும் அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.!*


தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 114வது ஜெயந்தி விழாவையொட்டி 3ம் மைல் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு  சிலைக்கு அணைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

திமுக

வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, சண்முகய்யா எம்எல்.ஏ, மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், 

மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், மாவட்ட அணி செயலாளர்கள் மதியழகன், ரமேஷ், பரமசிவம், மாவட்ட அணி துணைச் செயலாளர்கள் நலம் ராஜேந்திரன், பெருமாள், ராமர், ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், மாநகர தொண்டர் அணி அமைப்பளார் முருகஇசக்கி, 

மாநகர மருத்துவ அணி செயலாளர் அருண்குமார், மாணவரணி துணை அமைப்பாளர் பால்மாரி, சங்கரநாராயணன், கிறிஸ்டோபர் விஜயராஜ், அனிதா மாரிமுத்து, பகுதி துணைச்செயலாளர் பாலு, மாநகர அணி துணைச்செயலாளர்கள் பால்ராஜ், 

மாவட்ட பிரதிநிதிகள் இசக்கிராஜா, கதிரேசன், பாலசுப்பிரமணியன், சக்திவேல், வட்டச்செயலாளர்கள் சுரேஷ், கண்ணன், சிங்கராஜ், சுரேஷ், சாரதி, சதீஷ்குமார், சண்முகராஜ், சுந்தரேசன், வட்டபிரதிநிதி சுப்பையா, மற்றும் ஐயப்பன், வெள்ளச்சாமி, மகேந்திரன், சீனிவாசன், லிங்கராஜா, ஜெபசிங், குமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் அறிவுரைப்படி மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல் தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர்,ஒன்றிய செயலாளர் ஜவஹர்,  மாவட்ட இணைச்செயலாளர் செரினாபாக்கியராஜ், பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், மாவட்ட அணி நிர்வாகிகள் நடராஜன், வீரபாகு, தனராஜ், வலசை வெயிலுமுத்து, விக்னேஷ், 

பகுதி இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம், துணைச்செயலாளர் டைகர்சிவா, வர்த்தக அணி அமைப்பாளர் பட்டுராஜா, வழக்கறிஞர்கள் சுகந்தன்ஆதித்தன், சரவணன், கோமதி மணிகண்டன், தகவல் தொழில் நுட்ப அணி கௌதம் பாண்டியன் வட்டசெயலாளர் மனுவேல்ராஜ், பாலஜெயம், சாம்ராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சரும் அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் மேற்கு பகுதி செயலாளர் முருகன் முன்னிலையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில்  ஒன்றிய செயலாளர் செங்கான், பகுதி செயலாளர்கள் சேவியர், ராமகிருஷ்ணன், வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூமணி, பிள்ளைவிநாயகம், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் ஞான்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சேவியர்ராஜ்,  வட்டபிரதிநிதிகள் மூர்த்தி, மணிகண்டன், மகளிர் அணி மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அமமுக

அமமுக சார்பில் 3வது மைல் உள்ள அவரது சிலைக்கு மாநில அமைப்பு செயலாளர்கள் ஹென்றி, முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜ் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, பகுதி செயலாளர்கள் கிருஷ்ணசாமி, ரூஸ்வெல்ட், பொதுக்குழு உறுப்பினர் ராமேஸ்வரி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தேமுதிக 

தேமுதிக சார்பில் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் அதிசிய ராஜ் தலைமையில் மூன்று மேல் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 


நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் சண்முகம்,  ஒன்றிய துணை செயலாளர்  விஜயகுமார், ஒன்றிய அவைத் தலைவர் சண்முகம். ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் முல்லை கண்ணன், வட்ட செயலாளர்கள் சுரேஷ், தவதி பிரகாஷ்.ரமேஷ், சம்சுதீன்,அரச முத்து, நாரயண மூர்த்தி, பகுதி தலைவர் தாய்ப்பன் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்

Previous Post Next Post