வரும் கல்வி ஆண்டில் 50 ஆயிரம் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் நிலையை உருவாக்க வேண்டும் அதுவே தமிழக அரசின் நோக்கம் - அமைச்சர் சி.வி.கணேசன்..!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், திருச்செந்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் செயல்பட்டு வரக்கூடிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சர் கீதாஜீவன், மீன் வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்த ஆய்வின் போது இந்த தொழில் பயிற்சி நிறுவனத்தில் மாணவர்களின் எண்ணிக்கை சேர்க்கையின் விபரம் அங்கு உள்ள இயந்திரங்கள் குறித்தும் எந்த விதமான பிரிவுகளில் பாடத்திட்டங்கள் உள்ளன என்பது குறித்து கேட்டறிந்த அமைச்சர்கள் தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்கள் 

மேலும் இந்த தொழில் பயிற்சி நிலையத்தில் உள்ள பேஷன் டிசைனிங் பிரிவிற்கு அதிக அளவில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பயிற்சி நிலையம் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் வரும் ஆண்டுகளில் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு 

அதிக வேலைவாய்ப்பு என்பது உள்ளது எனவே சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் எனவே அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர் 

தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் சி.வி.கணேசன் தமிழக முதல்வர் இளைஞர்களுக்கு அதிக அளவிலான வேலை வாய்ப்பை உருவாக்கி வருகிறார்கள் அந்த வகையில் தொழில் பயிற்சி நிலையங்களில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிக அளவு கிடைக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்ச்சியாக தமிழகத்திலுள்ள 90 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள  வசதிகள் உள்கட்டமைப்பு கட்டிட வசதிகள் மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்ட குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது 

கடந்த 10 ஆண்டுகளாக அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் பராமரிப்பு செய்யாத காரணத்தால் 40 ஆயிரம் மாணவர்கள் படித்த அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் தற்போது 25,000 மாணவர்கள் மட்டுமே படித்து வருகிறார்கள்.

இதை அதிகப்படுத்த வேண்டும் என்ற வகையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகப்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்  தமிழகத்தில் அதிக அளவிலான வேலைவாய்ப்பு தற்போது உள்ளது இதன் காரணமாக திறன் மேம்பாட்டு துறை உருவாக்கப்பட்டு இதற்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

வரும் கல்வி ஆண்டில் 50 ஆயிரம் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் நிலையை உருவாக்க வேண்டும் அதுவே தமிழக அரசின் நோக்கம் படித்து முடிக்கக் கூடிய இளைஞர்களுக்கு கூடுதலான பயிற்சி அளித்து நல்ல நிறுவனங்களில் வேலை வழங்குவதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார் எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு துறை இயக்குனர் வீரராகவராவ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், 

மண்டல பயிற்சி இணை இயக்குனர் ராஜ்குமார், வேப்பலோடை அரசு தொழிற்பயிற்சி முதல்வர் செல்லகணி, நாகலாபுரம் அரசு தொழிற்பயிற்சி முதல்வர் ராஜன், தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி முதல்வர் திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post