கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசுடன் வங்கிகள் கைகோர்க்க வேண்டும் முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள்.!


மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது இக்கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது 

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் நீங்கள் இதுவரை தமிழக அரசுக்கும் மக்களுக்கும் செய்துவரும் சேவைகளை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 

இந்த சந்திப்பு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அரசாங்கத்திற்கும் வங்கிகளுக்கும் இடையிலான கூட்டுறவு உறவின் தொடக்கமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கிறது 

அதிலும் குறிப்பாக கனவிலிருந்து வென்று வரும் இக்காலகட்டத்தில் உங்களது பங்களிப்பு மிக முக்கியமானதாகும் ஒரு மாநிலத்தின் பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்கவும் 

பொருளாதாரம் புத்துயிர் பெறவும் தொடரின் போது பல குடும்பங்கள் அனுபவித்த வருமான இழப்பை பரிமாற்றம் வேண்டிய ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம் எனவே அரசு வங்கிகளும் இந்த நேரத்தில் இணைந்து செயல்படுவது மிக முக்கியமானது என்பதால் இக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 

கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி உடன் நாட்டிலேயே இரண்டாவது பெரிய மாநிலம் பொருளாதாரமாக தமிழ்நாடு உள்ளது தமிழக அரசு பல்வேறு முக்கியமான கட்டங்கள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது

இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் மக்களின் வளர்ச்சிக்கு குறிப்பாக சமூகத்தின் ஏழை மற்றும் நடுத்தர பிரிவினரின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மக்களுக்கும் வளர வேண்டும் அரசும் மலர வேண்டும் தொழில் நிறுவனம் வளர வேண்டும் அதுதான் உண்மையான வளர்ச்சி இது எது ஒன்று குறைந்தாலும் அது வளர்ச்சி ஆகாது மாநில விற்பனை வரியும் வைத்ததன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் மூன்று குறைக்கப்பட்டுள்ளது 

பல்வேறு நிதி நெற்கடியேல் இடையில்தான் இதனை வழங்கினோம் இதற்கு ஒரே காரணம் மக்களை காக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் தான் நேற்றும் இன்றும் நாளையும் திமுக அரசின் ஒரே நோக்கம் ஒன்றுதான் 

இந்த நோக்கத்திற்கு வங்கிகள் உதவ வேண்டும் திமுக ஆட்சி என்பது சுயநிதி குழுக்களின் பொற்கால ஆட்சி ஆகும் அதனை நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது அதற்கு தனி கவனம் செலுத்தி நடத்தினேன் 

பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு சுய உதவி குழுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன இந்த ஆண்டு வங்கி கடன் இணைப்புக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு உள்ளது செப்டம்பர் 2001 வரை 4950 ஒரு கோடி ரூபாய்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன 

இந்த ஆண்டு இலக்கை அடைய மீதமுள்ள தொகையையும் சேர்த்து வழங்க கேட்டுக்கொள்கிறேன் தமிழ்நாட்டில் 49.3 லட்சம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 96.63 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளனர் 

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு மற்றும் வரவிருக்கும் நாட்களில் அவர் ஒரு பெரிய சவாலாக உள்ளது ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு வங்கிகள் கைகோர்க்க வேண்டும் இந்த சந்திப்பு மாநிலத்தின் வளர்ச்சியில் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான கூட்டுறவின் தொடக்கமாக இருக்கும் என்ற எனது நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் பேசினார் 

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு, நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், மாநில அளவிலான வங்கியாளர் குழு தலைவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குனருமான முதன்மை செயல் அலுவலருமான சென்குப்தா, இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் என் சுவாமி, 

நபார்டு முதன்மை பொது மேலாளர் வெங்கட் கிருஷ்ணா மற்றும் வங்கிகளின் உயர் அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Previous Post Next Post