செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 3000 கன அடிநீர் திறக்கபட்டுள்ள நிலையில் ஆபத்தை உணராமல் மழைவெள்ளத்தை காண திரளும் பொதும்க்கள்


 கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 3000 கன அடிநீர் திறக்கபட்டுள்ள நிலையில் ஆபத்தை உணராமல் மழைவெள்ளத்தை காண சுற்றுலா தலமாக மாறிய அனகாபுத்தூர் ஆற்று பாலம்


சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் இருந்து குன்றத்தூர் வழியாக பூந்தமல்லி, திருமுடிவாக்கம், மீஞ்சூர் நான்கு வழிச்சாலை என பல்வேறு பகுதிகளுக்கு அனகாபுத்தூர் ஆற்று பாலத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது இந்நிலையில் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகங்கள் முதல், கனரக வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு அடையாறு ஆற்றின் வெள்ள பெருக்கை வேடிக்கை பார்த்து செலவது, ஆபத்தை உணராமல் சுற்றுலாதளமாக மாறி உள்ளது. கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் 3000 கன அடிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அடையாற்றில் அனகாபுத்தூர் பாலத்தை தொடும் அளவுக்கு வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளபெருக்கை அருகில் இருந்து வேடிக்கை பார்பதும், செல்பி எடுப்பது போன்றவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என காவல்துறையினரை சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கேட்டுகொண்டுள்ளனர்

Previous Post Next Post