மாநகரம் முழுவதும் மின் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது - கனிமொழி கருணாநிதி எம்.பி.!


கனமழையின் காரணமாக பாதிப்புக்குள்ளான ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகள் ஆன குமரன் நகர், ஹவுசிங் போர்டு, காமராஜ் நகர், ராம் நகர், ரஹ்மத் நகர், முத்தம்மாள் காலனி 

உள்ளிட்ட  பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது இதனை இன்று ஆய்வு மேற்கொண்ட  திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, மீன் வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.




குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றுவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக  அங்குள்ள மக்களிடம் தெரிவித்தனர். 

தொடர்ந்து  மழைநீர் வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென அதிகாரியிடம் கேட்டுக்கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தேங்கி உள்ள அனைத்து மழை நீரையும் அகற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் புனிதப்படுத்தும் உள்ளன 

மாநகரம் முழுவதும் மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ஓரிரு நாளில் தண்ணீர் வடிந்து விடும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.  

ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Previous Post Next Post