சென்னிமலை ஒன்றியத்தில் குளம் மற்றும் ஏரிகளை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு


பெருந்துறை நவ 30:

சென்னிமலை அடுத்துள்ள எக்கட்டாம்பாளையத்தை  சேர்ந்த விசுவநாதன் தமிழ்ச்செல்வன் ஆகியோர்  மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் இடம்பெற்றிருந்த விவரம் பின்வருமாறு:

எக்கட்டம்பாளையம் கிராமத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரமான ஆண்டிகாட்டு குளத்தின் நீர் நிலைகளை கல்குவாரி உரிமையாளர்களால் ஆக்கிரமித்து குளத்தின் கரை உடைக்கப்பட்டு கல்குவாரி வாகனங்கள் செல்லும் பாதையாக மாற்றப்பட்டு நீர் தேங்க முடியாமல் 200 ஏக்கரில் விவசாய நிலம் இந்த குளத்தினால் பாசனம் செய்யும் விவசாயிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் . 


நீர் நிலை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி அரசாணை எண் G.0.540/2014-ன் படி இந்த குளத்திற்கு சென்னிமலை மலையில் இருந்து உருவாகி வரும் பல்வேறு ஓடை வழிப்பாதையை ஆக்கிரமித்து கல்குவாரி உரிமையாளர்கள் கழிவு மண்ணைக்கொட்டி வைத்து உள்ளனர். 

எனவும் ஆண்டிகாட்டு குளத்திற்கு வரும் நீர் கல்குவாரிகளின் கழிவுகளால் மிகக் கடுமையாக மாசடைந்துள்ளது. நீர் நிலைகளை ஆக்கிரமிக்க கூடாது என தெரிந்தும் பலமுறை மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், இது தொடர்பான செய்திதாள்களில் செய்திகள் வந்தபடியும் அதிகாரிகள் இது வரை நடவடிக்கை எதுவும் எடுக்காததால் இன்று கல்குவாரி உரிமையாளர்கள் சட்ட விரோதமாக குளத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

அய்யம்பாளையம் ஆண்டிகாடு குளத்திற்குள் உள்ளேயே வழித்தடம் போட்டு செல்லும் கல்குவாரி கிரசர் மற்றும் M-Sand ஆலையில் கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தக்கோரி இது சம்மந்தமாக 29.10.2021 விவசாயிகள் குறை தீர்ப்புக்கூட்டத்திலும் 12.11.2021 சென்னிமலை ஊராட்சி ஒன்றிய வளர்ச்சிப்பணிகள் ஆய்வுக் கூட்டத்திலும் மனு அளித்தோம்.

சில்லாங்காட்டு வலசு

ஊர் மக்கள் பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் ஆண்டிகாட்டு குளம் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழக அரசும் ந.க.எண்: 35083/21/2021 நாள்: 23.11.2021 அன்று நீர்நிலை, நீர்வழிபாதை ஆக்கிரமிப்பு செய்ய அனுமதிக்க கூடாது. அவ்வாறு நடந்தால் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

ஆகவே அரசாணை:54ன் படி நீர்நிலை ஆக்கிரமிப்பான ஆண்டிகாட்டு குளம் மற்றும் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற தாங்கள் இது சம்பந்தமாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு ஆண்டிகாடு குளத்தை மீட்டுத்தர வேண்டும். மேலும் ஆண்டிக்காடு குளத்தின் ஓடைகளின்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் அகற்றியும் குளத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீதுநடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதார பாதிப்பை தடுத்து நிறுத்தவேண்டுகிறோம். எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Previous Post Next Post