பொதுமக்கள் அனைவரும் துணிப் பைகளை பயன்படுத்த கோரி 7வயது சிறுமி ஸ்கேட்டிங் செய்து விழிப்புணர்வு.!


பாலிதீன் பைகள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். அனைவரும் துணிப்பை உபயோகப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் சார்பில்

7 வயது சிறுமி ரவீனா என்பவர் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஸ்கேட்டிங் சென்று பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கி விழிப்புணர்வு நடைபெற்றது.

இதில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  விழிப்புணர்வு நிகழ்வை தொடங்கி வைத்தார். 



கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பிருந்து காந்தி மைதானம் வரை ஸ்கேட்டிங் மூலம் சென்று பொதுமக்களுக்கு துணிப்பை விநியோகம் செய்தவாறு 7 வயது சிறுமி ரவீனா என்பவர் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஸ்கேட்டிங் சென்று பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சிறுமி ரவீணாவை சமூக ஆர்வலர்கள் சால்வை அணிவித்து கௌரவித்தனர்.   நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் கருணாநிதி,சுவாமி விவேகானந்தா மற்றும் ஸ்கேட்டிங் கழக மாநில ஆலோசகர் ராஜகோபால், 


அருணாச்சலம் ஆன்மீக அரக்கட்டளை அசோக்குமார், அரசு மருத்துவமனை இயற்கை மற்றும் யோகா மருத்துவர் திரு முருகன்,நகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளர் நாராயணன் காந்தி, 

அறக்கட்டளை பொறுப்புத் தலைவர் திருப்பதி ராஜா,தொழில் அதிபர்கள் ராமராஜ், நடராஜ்,யோகா பயிற்சியாளர் லட்சுமணன், ஸ்கேட்டிங் பயிற்சியாளர் கனகராஜ், மாணவியின்  பெற்றோர் விஜயன், ரம்யா, சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ் குமார்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post