கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை

கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை 


கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணத்தால் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள நீர் நிலைகளில் பொதுமக்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் குளிக்க செல்லும் பொழுது நீர்சூழல் (அ) சேறுகளின் புதைக்குழிகளில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் 10 அடி ஆழத்திற்கு மேல் உள்ள குளம் மற்றும் குட்டைகளில் எச்சரிக்கை பலகை அமைத்திட பொதுப்பணித்துறை/நீர்வள ஆதாரத்துறை/கிராம பஞ்சாயத்துக்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் குளிக்கவோ. மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்குக்காகவோ செல்வதை தவிர்க்க வேண்டும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் குமார் பாடி தனது செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்
Previous Post Next Post