ஆண்டிபட்டியில் குப்பை கிடங்கில் இயங்கும் கிராம நிர்வாக அலுவலகங்கள்.!



ஆண்டிபட்டி , ஜன. 31-

இப்ப விழுமோ? எப்ப விழுமோ? என்ற சந்தேகத்தில் மோசமான கட்டிடத்தில் ஆண்டிபட்டியில் குப்பை கிடங்கில் இரண்டு கிராம நிர்வாக அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.


 தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வேலப்பர் கோவில் சாலையில் ஆண்டிபட்டி பிட் 1 மற்றும் பிட் 2 ,உள்ளிட்ட 2 கிராம நிர்வாக அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அருகிலேயே வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இயங்கி வருகிறது .சுமார் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு வருவாய் துறை சார்ந்த சான்றிதழ் பெறுவதற்கு, விண்ணப்பங்கள் பெறுவதற்கும், அரசின் சலுகைகள் பெறுவதற்கும் தினந்தோறும் இங்கு வருவது வழக்கம்.

 இந்த இரண்டு கட்டிடங்களும் மிகவும் பழமையானவை. இப்ப விழுமோ? எப்ப விடுமோ? என்ற அச்சத்தில்  உயிர் பயத்துடன் இங்கே அலுவலர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும் இதற்கு அருகாமையிலேயே பெரிய சாக்கடை ஓடுவதால் கொசுத்தொல்லை ஏற்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. 

மேலும் இதன் அருகிலேயே சிறுநீர் கழிக்கும் இடமும் இருப்பதால் மூத்திர வாடையில் தான் கிராம நிர்வாக அலுவலர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். சுற்றிலும் சுகாதாரமற்ற முறையில் குப்பை கிடங்காக காட்சியளிக்கிறது .மேலும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் நடைபாதை கூட இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.


மேலும் மாலை, இரவு ,அதிகாலை நேரங்களில் இப்பகுதியை மது கூட பாராகவே செயல்பட்டுவருகிறது. சமூக விரோத செயல்களும் நடந்து வருகிறது.

 வருவாய் துறை சார்ந்த அலுவலர்களுக்கு எங்கெங்கு அரசு நிலம்  இருக்கிறது என்பது நன்றாகவே தெரியும் . வேறு ஒரு இடத்தை தேர்வு செய்து ,புதிய அலுவலகம் கட்டி செயல்படுத்தலாம் . என்ன காரணத்திற்காகவோ, வருவாய்த்துறையினர் இதே இடத்தில் குப்பை கொட்டுகிறார்கள் என்று தெரியவில்லை.

பொது மக்கள் நலன் கருதியும், உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பும் ,உடனடியாக வருவாய்த்துறையினர் செயல்பட்டு ,இரண்டு கிராம நிர்வாக அலுவலகங்கைளை, தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். அல்லது இந்த இரண்டு கட்டிடங்களையும் இடித்துவிட்டு சுகாதார வசதியோடு, ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து விலகி, புதிய கட்டிடம் கட்டி செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி செய்தியாளர்,

ரா.சிவபாலன்

Previous Post Next Post