"Coffee With Collector" - பள்ளி மாணவ, மாணவியர்களின் திறன்களை ஊக்கப்படுத்த விருதுநகர் ஆட்சியரின் அசத்தல் நிகழ்ச்சி.!

 

விருதுநகர்: பள்ளி மாணவ, மாணவிகளின் திறன்களை ஊக்கப்படுத்தும் விதமாக புதிய நிகழ்ச்சியான Coffee With Collector-ஐ விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டி தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தின் மாவட்ட ஆட்சியர்களில் மிகவும் வித்தியாசமானவராக இருக்கிறார் விருதுநகர் ஆட்சியர் மேகநாத் ரெட்டி.  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். சமூக வலைத்தளங்களின் மூலமாக சுட்டிக்காட்டப்படும் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் நெட்டிசன்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகின்றார்.

கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்ததற்கு இணையதளத்தில் ஏராளமான மாணவர்கள்  நன்றி தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த கலெக்டர், “தம்பிகளா சோசியல் மீடியாவை,(ஃபேஸ்புக்கை) மூடிவிட்டு சோசியல் சயின்ஸ் புத்தகத்தை எடுத்து அமர்ந்து படியுங்கள். நாளை பள்ளியில் தேர்வு உள்ளது” என பதில் அளித்து மாணவர்களை திடுக்கிட வைத்தார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர் ட்விட்டரில்,
#virudhunagar மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் நலன் கருதி (18.11.21) விடுமுறை அளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்..🙏
#HeavyRain #TNRain #SchoolLeave #collegeLeave @VNRCollector @jmeghanathreddy Please Reply Sir 🙏

என மாவட்ட ஆட்சியருக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டி, ‘இல்லை... விருதுநகரில் தினமும் இரவில் மழை பெய்கிறது. காலை வெயில் அடிக்கிறது’என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிருஸ்துஸ் மற்றும் அரையாண்டு விடுமுறை குறித்து பதிவிடுகையில்.., தம்பிகளா, விடுமுறையை எவ்வாறு செலவிடுவது.. குடும்பத்தினருடனும் மற்றும் நண்பர்களுடனும் 50 சதவீத நேரத்தை செலவிடுங்கள். மொபைல், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களுக்கு 10 சதவீத நேரத்தை செலவிடுங்கள்.  20 சதவீத நேரத்தை விளையாடவும் 20 சதவீத நேரத்தை ஓய்வுக்கும் செலவிடுங்கள். படிங்கள், மீண்டும் படிங்கள். இது புத்தாண்டு விடுமுறை மட்டுமே, ஆண்டு விடுமுறை அல்ல. பாதுகாப்பாக இருங்கள் ‘ என்று பதிவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் தனது ட்விட்டர் கணக்கில் திருகார்த்திகை தினத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அதை விருதுநகர் ஆட்சியர் மேகநாத் ரெட்டிக்கு டேக் செய்திருந்தார். இந்த டிவீட்டை பார்த்த ஆட்சியர், பெற்றோரை அழைத்து கொண்டு என்னை வந்து பார்க்கவும என பதிலளித்திருந்தார். அத்தோடு ஆள் அட்ரஸே இல்லை

இப்படி மாணவர்களின் கேள்விக்கு பொறுப்புடன் பதிலளித்து வரும் விருதுநகர் ஆட்சியர் மேகநாத் ரெட்டி பள்ளி மாணவ, மாணவியர்களின் திறன்களை ஊக்கப்படுத்தும் விதமாக புதிய நிகழ்ச்சி ஒன்றை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் 11 ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வி, பொதுஅறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தலா 15 மாணவ, மாணவியர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் அழைத்து அவர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளார். இதன் மூலம் விருதுநகர் மாணவர்களின் திறமைகளை அறிந்து கொண்டு அவர்களை வெளிக்கொண்டு வர இந்நிகழ்ச்சி அமையும் என பெற்றோர்கள் ஏக மகிழ்ச்சியில் உள்ளனர், ஆட்சியருக்கும் பாராட்டுக்கள் குவிகின்றன.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post