செக்குப்பாளையம் மாரியம்மன்,மாகாளியம்மன்கோவில்களில் அம்மாவாசை பூஜை


 ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டம் கெட்டி செவியூர் ஊராட்சியில் செக்குப்பாளையம் விநாயகர், மாரியம்மன்,மாகாளியம்மன், செல்லாண்டியம்மன்,நாட்றாயன் வகையறா கோவில்களில் அம்மாவாசை பூசை வெகு விமரிசையாக நடைபெற்றது. அதுசமயம் கோவில் திருபணிகள் செய்தல் சார்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.செக்குப்பாளையம், வாணிப்புத்தூர், கள்ளியங்காடு, ஓடக்காடு, குள்ளங்காடு, வரப்பனங்காடு,அம்மன் கோவில்பதி, போக்குவரத்து நகர்,செட்டியாம்பாளையம்,பாப்பாங்காடு, பள்ளிபாளையம் ஆகிய ஊர்களில் இருந்து  இக்கோவிலுக்கு சேர்ந்த மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.சிறப்பு அழைப்பாளராக கெட்டிச்செவியூர் பஞ்சாயத்து தலைவர் மகுடேஸ்வரன்  கலந்து கொண்டு கோவில் திருப்பணிகள் சார்ந்த   ஆலோசனைகளை வழங்கினார்கள்.
செக்குப்பாளையம் கொத்துக்காரர் ஆசிரியர் சந்திரசேகரன், சின்னசாமி, சோமசுந்திரம், ஈஸ்வரன், ஓடக்காடு தண்டபாணி மற்றும் ஊர் மக்கள்  தலைவர் மகுடேஸ்வரனுக்கு மாலையணிவித்து பிரசாதம் வழங்கினர்.

Previous Post Next Post